Saturday 19 April 2014

கடாய் மஷ்ரூம்(kadaai mushroom)








தேவையான பொருள்கள்

மஷ்ரூம்                             1 பாக்கெட் 
வெங்காயம்.                    1 பெரியது
தக்காளி.                           2
இஞ்சி பூண்டு விழுது   1 தேக்கரண்டி
மிளகாய் தூள்                 1 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள்                    1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள்          1 தேக்கரண்டி
குடை மிளகாய்                1
கொத்தமல்லி                  சிறிதளவு
சீரகம்.                                 1/2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்          தேவையான அளவு


செய்முறை 


  • முதலில் காலானை (mushroom)நீரில் கழுவி மேலே இருக்கும் அழுக்குகளை நீக்கி பின் சுத்தமான துணியால் துடைத்து  நறுக்கி வைக்கவும் .
  • வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய்   ஊற்றி காய்ந்ததும் சீரகம் பொட்டு பொரிய விடவும். பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் நறுக்கி வைத்திருக்கும்  தக்காளியை  போட்டு குழைய வதக்கவும்.
  • பின்பு குடைமிளகாய் சேர்த்து சிறிது வதங்கியதும் (குடைமிளகாய் நிறம் மாறி விடாமல் லேசாக வதங்கினாலே போதும்) கரம் மசாலா,மிளகாய் தூள்,மல்லித்தூள்,உப்பு  ஆகியவற்றை சேர்த்து வதக்கி பின் நறுக்கி வைத்திருக்கும் காலானையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • காலான் வதங்கும் போது நீர் விடுமாகையால் தனியாக நீர் சேர்க்க  வேண்டி இருக்காது. தேவைப்பட்டால் சிறிது நீரை சேர்த்து மூடி 5 நிமிடம் சிறு தீயில் கொதிக்க விடவும்.
  • கொதித்து சரியான பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.
  • இத்துடன் பாதி வெங்காயத்தை கட்டமாக வெட்டி தனி தனி இதழ்களாக பிரித்து  எண்ணெய்யில் வதக்கியும் சேர்க்கலாம்.

1 comment:

  1. friv4school 2019
    friv the game
    Jogos 2019


    Pretty good post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed reading your blog posts. Any way I'll be subscribing to your feed and I hope you post again soon.

    ReplyDelete