என் அப்பா: சில நேரங்களில் எனக்கு அம்மா , கஷ்டமான நேரங்களில் எனக்கு நம்பிக்கை கொடுக்கும் தோழன், சில நேரங்களில் எனக்கு சிறு பிள்ளையாகவும் தெரிபவர் தான் என் அப்பா.


சிறு வயதில் தெய்வ நம்பிக்கை கொடுத்தவர் அம்மா தான், ஆனால் இடையில் அனைத்தையும் வெறுத்த எனக்கு கஷ்டங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி அதை எதிர்கொள்ள தெய்வ நம்பிக்கையும் வேண்டும் என்று கற்று கொண்டது என் அப்பாவிடம் தான்.


எங்கள் வீட்டில் நாங்கள் (நான் & என் தங்கை) இருவருமே பெண் பிள்ளைகள் தான், இதுவரை ஆண் பிள்ளை இல்லை என்று வருத்தமே பட்டிராத என் அப்பாவிற்கு நான் சொல்ல/ தர விரும்புவது உங்களுக்கு நான் என்றென்றைக்கும் துணையாக இருப்பேன், கடைசி வரை உங்களை கஷ்டப்படாமல் பார்த்து கொள்வேன் என்ற நம்பிக்கையை தான்.



என் அப்பாவுடன் இருந்த/ இருக்கும் எல்லா தருனங்கலுமே அருமையானவை தான்.ஒரு சிலவற்றை மட்டும் நான் இங்கு பகிர்கிறேன்.


பதினேழாவது வயதில் என் அம்மாவை ஒரு விபத்தில் இழந்துவிட்டோம். என் தங்கைகு பதினைந்து வயது. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தாயின் அரவணைப்பும், அறிவுரையும் , வழிகாட்டுதலும் தேவை படும் சமயம்.


அந்த பொறுப்பை அழகாக எடுத்துக்கொண்டு தேவையான சமயங்களில் தேவைப்பட்ட அறிவுரைகளை வழங்கி இன்று வரை நெறி தவறாமல் வளர்த்தவர் தன என் அப்பா.


அன்று வரை எங்களை போல அப்பாவும் சிறு பிள்ளையாக இருந்தவர் தான். விவசாயம் மட்டுமே தெரியும், மற்றைய குடும்ப விஷயங்கள் அனைத்தையும் பார்த்துகொன்டவர் அம்மா தான்.


சமையல் கூட எங்கள் மூவருக்கும் தெரியாது, அன்றைய நிலையில் இனி இந்த குடும்பம் என்ன ஆகுமோ என்று வருதியவர்கள் ஏராளம்.
ஆனால் இன்று அணைத்து துக்கங்களையும் விழுங்கி இன்று ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு ஆதாரமாக இருப்பவர் என் அப்பா மட்டுமே.
முதல் நாள் கூட இருந்த அம்மா இல்லை, அடுத்த நாள் பள்ளியில் பரிட்ச்சை, 19 வருட திருமண வாழ்க்கையில் அனைத்துமாக இருந்த மனைவியை இழந்திருந்தாலும் , தன்னை உடனே சமன் படுத்திக்கொண்டு , நடந்ததை நினைத்து ஓயிந்து போகாமல் படிப்பில் கவனத்தை செலுத்த செய்தவர் அவர்.


இன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம்மாக இருக்கும், எப்படி நம்மால் முடிந்தது என்று, காரணம், அப்பா அம்மா மேல் வைத்திருந்த அன்பை பற்றி நான் அறிவேன்.ஒரு சிறு கருத்து வேறுபடும் கொண்டதில்லை அவர்களுக்குள்.




பெண் இல்லாத வீடு மதிப்பு இல்லாதது என்று ஒரு பாலஸ்தீன பழமொழி உண்டு. 


ஆனால் இன்று எங்கள் ஊரில் உள்ளவர்கள் மட்டும் இன்றி , உறவினர்களும் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக சொல்ல கூடிய அளவுக்கு எங்களை வளர்த்த பெருமை அப்பாவையே சேரும்.


இன்று வரை நாங்கள் என் அப்பாவிற்கு பயந்தது இல்லை. எதற்கு பயப்பட வேடும் அவர் ஒன்றும் மூன்றாம் மனிதர் அல்லவே, இந்த எண்ணத்தினால் இன்று வரை நாங்க எந்த ஒரு விஷயத்தையும் அவரிடம் மறைத்ததும் இல்லை.


அவர் இதுவரை பெரிதாக நேரடி அறிவுரை கூறியதில்லை. பள்ளி கல்லூரிகளில் நடக்கும் சிறு சிறு விஷயத்தையும் அன்றே வந்து வீட்டில் கூறும் பழக்கம் எங்களுக்கு உண்டு. அப்பொழுது அவரின் கருத்துக்களை கூறி மறைமுகமாக விஷயங்களை எடுத்து கூறுவார்.
தோழிகள் செய்யும் தவறுகளை சுற்றி காட்டி இது தவறு, இப்படி செய்ய கூடாது என்று நீ எடுத்து சொல் என்று காரண காரியங்களை எனக்கு விளக்குவார். இது தோழிக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் சேர்த்தே தான் என்று தெரியும். இது தான் என் அப்பா.
இப்படி தான் எங்களுக்கு maturity வந்தது எனலாம்.


கல்லூரியில் கடைசி வருட படிப்பின் பொழுது campus interview நடந்தது. முதல் தேர்வில் தோற்று வருந்திய பொழுது, தோல்வியை கண்டு துவளாமல் தனம்பிக்கை கொடுத்து அடுத்தடுத்து இரண்டு MNC கம்பனியில் தேர்வானதற்கு என் அப்பாவின் உறுதுணையும், அம்மாவின் ஆசியுமே காரணம்.


தஞ்சாவூரில் தேர்வு. எங்கள் ஊரில் இருந்து 4 மணி நேர பிரயாணம். காலை 9 மணிக்கு அங்கு இருக்க வேண்டும் என்றார்கள். என் ஊர் கிராமம் என்பதால் மயிலாடுதுறைக்கு விடியற்காலையில் நேரடி பேருந்து இல்லை. என்ன செய்வது என்று தவித்த பொழுது, எப்படியாவது செல்ல வேண்டும் என்ற உறுதியான எண்ணம். விடியற்காலை 3 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி 6 KM சைக்கிள் பயணம், பின்பு வேறு ஊருக்கு (சுற்று வழி)பஸ் பிடித்து இறுதியில் சரியான நேரத்துக்கு என்னை அழைத்து சென்றார்.


அன்றைய நிலையை இப்பொழுது நினைத்தாலும் கண்கள் கலங்கி விடும்.காரணம் தெரு விளக்குகள் இல்லாத இருட்டில், அப்பாவுக்கு அப்பொழுது சற்று கண் பார்வை குறைபாடு வேறு, அத்தகைய நிலையிலும் உறுதி குலையாமல் , என்னை cycle lil அழத்து சென்ற என் அப்பா என்றுமே எனக்கு ஒரு வரம் தான்.


இன்றும் நான் ஊருக்கு செல்லும் பொழுது என் அப்பாவுக்கு குளிக்கும் பொழுது தலை தேய்த்து விடுவேன், அது எனக்கு பிடித்தமான செயலும் கூட. 
வேலை பார்க்கும் பொழுது சென்னையில் இருந்து வாங்கி செல்லும் திண் பண்டங்களை என் தங்கையுடன் அவர் ஆர்வமாக உண்ணும் பொழுது இத்தனை maturity கொடுத்த அப்பா சிறு பிள்ளையாகவே என் கண்களுக்கு தெரிவார்.அவரே குடும்ப தலைவர், அவர் நினைத்தால் நினைத்த பொழுது நினைத்ததை சாபிடலாம், ஆனால் ஒருநாளும் எங்களை விட்டு அவர் எதையும் உண்டதில்லை.அந்த அன்பு ,அது போன்ற தருணங்கள் மிகவும் அற்புதமானவை.


ஒரு குழந்தைக்கு அதன் பெற்றோர்களே முதல் குரு ஆவார்கள். 
என்னை பொறுத்தவரை ஒரு நல்ல தந்தை என்பவர், 


* தன குழந்தைகளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். என் பிள்ளை தவறு செய்ய மாட்டான்/மாட்டாள் என்று. அந்த நம்பிக்கை நிச்சயமாக அந்த பிள்ளையை நேர் வழியில் இட்டு செல்லும்.


* ஒரு நல்ல அப்பா குழந்தைக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். நல்ல பழக்கங்களை கொண்டிருக்க வேண்டும். அவரை பார்த்தே பிள்ளைகள் வளர்வதால் தந்தை செய்யும் கெட்ட விஷயங்களை பார்க்கும் குழந்தைகள் " நம் அப்பா வே செய்றார் நாம் ஏன் செய்ய கூடாது" என்று யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


* அந்தந்த வயதிற்கு உரிய சுதந்திரத்தை குழந்தைகளுக்கு தர வேண்டும்.
சிறு பிள்ளைகளுக்கு படிப்பதென்பது சற்று கஷ்டமானதாக இருக்கும், விளையாடுவது பிடித்திருக்கும். அப்பொழுது அப்பிள்ளைகளுக்கு எடுத்து கூறி படிக்க சொல்லலாம்.அனால் அதே பிள்ளையை கல்லூரியில் சேரும் வயதிலும் நம் என்னத்தை அவர்களிடம் திணிக்க கூடாது. அவர்களில் ஆர்வத்தை பொருத்து அதன் நன்மை தீமைகளை எடுத்து கூறல் வேண்டும்.


* தோல்வி உற்ற நேரங்களில் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை அளித்து
"தோல்வியே வெற்றியின் முதல் படி" என்று புரிய வைக்க வேண்டும்.


* தான் பெற்ற கஷ்டங்கள் தன பிள்ளைகள் பெற கூடாது என்று நினைக்கும் அப்பா/அம்மா அந்த கஷ்டத்தை அவர்களுக்கு சொல்லி வளர்க்கலாம்.அது அவர்களின் நல வாழ்க்கைக்கு உறுதுணையாக அமையும்.


* ஒரு நல்ல அப்பா நிச்சயம் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தோழனாக இருத்தல் வேண்டும் , காரணம் அது பிள்ளைகளுக்கு ஒரு பலத்தை கொடுக்கும் என்பதே என் கருத்து.


* குடும்ப விஷயங்களில் பிள்ளைகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும். அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இது பிற்காலத்தில் அவர்களின் முடிவெடுக்கு திறனை அதிகரிக்கும்.


* குடும்பத்தின் மீது பற்றுதல் உண்டாவதற்கு ஒரு தந்தையின் செயல்பாடுகளும் முக்கிய காரணியாக விளங்கும் என்றே எண்ணுகிறேன். ஒரு தந்தை பொறுப்பில்லாமல், ஊதாரியாக இருப்பதை பார்த்து வளரும் பிள்ளைகள் அதையே பின்பற்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


இவை அனைத்தும் ஒரு தந்தை, ஒரு சிறந்த தந்தையாக இருக்கும் காரணிகளாக எண்ணுகிறேன்.


எனக்கு சிறு வயதில் இருந்தே பெரிதாக பொருள் வசதிகளை கொடுக்கவிடுனும், மிக அருமையான அப்பா அம்மா வை கொடுத்த இறைவனுக்கு என்றென்றும் என் நன்றியை சொல்ல கடமைபட்டுள்ளேன்.


என் அப்பா பற்றிய என் நினைவுகளையும் , கருத்துக்களையும் இங்கு பதிய வாய்பளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.