தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி 1 கப்
வெந்நீர் தேவையான அளவு
தேங்காய் துருவல் 1 கப்
செய்முறை:
அரிசியை நன்றாக கழுவி பின் ஒரு துணியில் பரப்பி உலர வைக்கவும்.
நன்கு உலர்ந்ததும் அதை mixie யில் மாவாக அரைத்து சலித்துக்கொள்ளவும். சலித்த மாவில் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு பிசையவும்.
பின்பு அதை பிடி கொழுக்கட்டைகளாகவும் அடை கொழுக்கட்டைகளாகவும் செய்து, இட்லி தட்டில் புங்க இலைகளை பரப்பி அதன் மேல் இக்கொழுக்கட்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
இதற்கு உப்பு சேர்க்க கூடாது. தேங்காய் சேர்ப்பதால் இது தனி சுவையாகவே இருக்கும்.
கொழுக்கட்டை அடை செய்வதற்கு முதலில் கொழுக்கட்டை மாவை வட்ட வடிவமாக 1/2 இன்ச் தடிமனாக தட்டவும். பின்பு மேலும் கொஞ்சம் மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக (சீடை அளவுக்கு) செய்து தட்டி வைத்துள்ள அடியின் மேல் வைத்து இட்லி தட்டில் ஒவ்வொரு அடியாக வேக வைத்து எடுக்கவும்.