தேவையான பொருட்கள்:
- பச்சை அரிசி 1 கப்
- பயத்தம் பருப்பு 1/2 கப்
- கடுகு 1 டேபிள்ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
- கடலை பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
- பெருங்காயபொடி சிறிதளவு
- சிவப்பு மிளகாய் 2
- பச்சை மிளகாய் 2
- கருவேப்பிலை 1 கொத்து
- எண்ணெய் தாளிப்பதற்கு
- உப்பு தேவைக்கேற்ப
- தண்ணீர் 2 கப்
- இஞ்சி 1 சிறு துண்டு
செய்முறை:
முதலில் அரிசியையும், பயத்தம் பருப்பையும் தனி தனியாக சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து (pressure cooker ரிலும் வைத்துக்கொள்ளலாம் )
அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், சிவப்பு மிளகாயை கிள்ளி போட்டு, பின் கடலை பருப்பு , உளுத்தம்பருப்பு கறிவேப்பிலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.
பெருங்காய பொடியையும் சேர்த்து வறுபட்டதும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்கு வந்தங்கியதும் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கும் நீரில் உப்பையும் சேர்க்கவும்.
நீர் நன்றாக கொதிக்கும் பொழுது அரிசியையும் பயத்தம் பருப்பையும் போட்டு மூடி வேக விடவும்.
வெந்தவுடன் சூடாக தேங்காய் சட்னியுடன் காலை அல்லது இரவு உணவாகவோ சாப்பிடலாம்.
இதில் காரட்(carrot),பீன்ஸ்(beans), உருளை கிழங்கு (potato) போன்ற காய்களையும் பொடியாக வெட்டி சேர்க்கலாம்.
தேங்காய் துருவல் சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.
பருப்பு அதிகம் பிடிக்காதவர்கள் சிறிது குறைத்தும் சேர்த்துக்கொள்ளலாம்.
இதை அரிசி சுண்டல் என்றும் கூறுவர்.