இது காலை அல்லது இரவு உணவாக செய்யும் ஒரு மிக எளிய பதார்த்தம்.
தேவையான பொருட்கள்:
அரிசி 1 கப்
தண்ணீர் 2 கப்
புளி சிறிய எலுமிச்சை அளவு
சிவப்பு மிளகாய் 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு 3 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 2 டேபிள் ஸ்பூன்\
கறிவேப்பிலை 1 கொத்து
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
செய்முறை:
1.முதலில் அரிசியை எண்ணெய் விடாமல் நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
3. ஒரு அடி கனமான பாத்திரத்தில் (அல்லது) pressure cooker ல்எண்ணெய் விட்டு
கடுகு சேர்த்து வெடித்ததும் மிளகாயை கிள்ளி போட்டு வறுபட்டதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காய பொடி சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் கறிவேப்பிலை சேர்த்து புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்
4. கொதிக்கும் நீரில் உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும்.
5. தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதில் வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
6. பாத்திரத்தை மூடி நன்கு வேக விட்டு இறக்கவும்.
குறிப்பு:
இதனுடன் அப்பளம் அல்லது கூழ் வடகம் சேர்த்து சாப்பிட மிக நன்றாக இருக்கும்.
காரம் அதிகம் தேவைபடுபவர்கள் மிளகாய் அதிகம் சேர்க்கலாம்.