Saturday 23 July 2016

வெங்காயம் , வெந்தய புளி தண்ணி (Onion Fenugreek Rasam)


இது சாதத்தில் கலந்து சாப்பிடும் ஒரு ரசம் வகை ஆகும். இது மிக ருசியான, அதே சமயம்  குறைவான நேரத்தில் செய்யகூடியது. எங்கள் அம்மா இரவு நேரங்களில் சாதம்  வைத்தால் இதை செய்வார்கள்.
இப்பொழுது செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம்                          1
வெந்தையம்                          1 தேக்கரண்டி
புலி                                             1 எலுமிச்சை அளவு
சிவப்பு மிளகாய்                  5 (அ) 6
பெருங்காய தூள்                 1 தேக்கரண்டி
கடுகு                                          1 தேக்கரண்டி
கடலை பருப்பு                       2 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                           1 தேக்கரண்டி
எண்ணெய்                             தாளிக்க
உப்பு                                          தேவையான அளவு
கறிவேப்பிலை                      1 கொத்து


செய்முறை:
முதலில்  புளியை  நீரில் ஊற விடவும்.
வெங்காயத்தை போடியாக நருக்கி வைத்துக்கொள்ளவும்.


ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி கடுகை போட்டு பொரிந்ததும் வெந்தையம், பெருங்காயபோடி போட்டு பொரிந்ததும் சிவப்பு மிளகாயை கிள்ளி போட்டு  வறுபட்டதும் கடலை பருப்பு சேர்த்து வறுபட்டதும் பொடியாக  வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை  போட்டு நன்கு வதக்க வேண்டும்.


பின்பு புளி கரைசலை ஊற்றி உப்பு , மஞ்சள் தூளை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் அளவு கொதிக்க வைத்து இறக்கவும்.




இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
இதில் காரத்திற்கு சிவப்பு மிளகாய் மட்டுமே சேர்ப்பதால் தேவைக்கு ஏற்ப  1 அல்லது 2 மிளகாயை  கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்.
இது மிகவும் மணமான ஒரு ரசம் ஆகும்.
இதற்க்கு கூழ் வடகம் அல்லது பொறித்த அப்பளம் சுவையாக இருக்கும்.




No comments:

Post a Comment