- மேரி பிஸ்கட்(Marie biscuit) 1 பாக்கெட்
- பால் 500 மி.லி
- கோகோ பவுடர் (cocoa powder) 3 மேஜை கரண்டி
- கஸ்டர்ட் பவுடர்(custard பவுடர்) 3 மேஜை கரண்டி
- முந்திரி தேவையான அளவு
- சர்க்கரை 8 மேஜை கரண்டி
- காபி டிகாஷன்(coffee decotion) 1/2 கப்
முதலில் எல்லா biscuit யும் டிகாஷனில் நனைத்து ஒரு பாத்திரத்தில் அடுக்கி வைக்கவும்.
சிறிதளவு பாலில் கோகோ பவுடர் , கஸ்டர்ட் பவுடர் ஆகியவற்றை நன்கு கட்டி இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் மீதம் உள்ள பாலை ஊற்றி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்பு கலந்து வைத்துள்ள கோகோ கஸ்டர்ட் கலவையை கொட்டி கரண்டியால் கலக்கவும். பால் மெதுவாக கெட்டியாகும்.
நன்கு கொதித்து கரண்டியில் ஓட்டும் அளவுக்கு கூழ் போல் வந்ததும் அடுக்கி வைத்துள்ள பிஸ்கட் மேல் ஊற்றி , முதிரியை சிறிதாக உடைத்து மேலே தூவி fridge ல் குறைந்தது 4 மணி நேரம் வைத்து எடுத்து பரிமாற வேண்டும்.
குறிப்பு:
- custard powderக்கு பதிலாக corn flour ஐ பயன்படுத்தலாம். அப்பொழுது சிறிது vannila essence சேர்க்க வேண்டும்.
- அதிக நேரம் fridge ல் வைக்க வேண்டி இருந்தால் மேலே clingwrap போட்டு வைக்க வேண்டும்.
- coffee decotion இல்லை என்றால் இன்ஸ்டன்ட் காபி பவுடர் ஐ சூடான நீரில் கலந்து அதில் biscuit ஐ நனைக்கலாம்.
- decotion சுவை பிடிக்காதவர்கள் பாலில் நனைத்தும் செய்யலாம்.
No comments:
Post a Comment