(Black eye Beans / Red Beans kuzhambu)
தேவையான பொருட்கள்
காராமணி பயறு 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
கடுகு 1/2 தேக்கரண்டி
எண்ணெய் 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
தனியா தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லி தழை சிறிதளவு
செய்முறை
காராமணி பயிரை குறைந்தது 5 மணி நேரம் அல்லது முழு இரவு ஊற வைத்து நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் வைக்கும் பொழுதே சிறிதளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளலாம் .
ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரிலேயே எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்துக்கொண்டால் வெங்காயம் சீக்கிரம் வதங்கும்.
பின்பு தக்காளியை சேர்த்து மசியும் அளவு வதக்கவும். அதில் மேல குறிப்பிட்டு உள்ள போடி வகைகளை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் அளவு வதங்கியவுடன் வேக வைத்த காராமணி பயறை நீரோடு சேர்த்து லேசாக மசித்து சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். இறக்கும் முன்பு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
குறிப்பு:
காராமணி யை வேக வைக்கும் பொழுது நீரை மூழ்கும் அளவு வைத்தால் போதுமானது, தக்காளி கலவையுடன் சேர்க்கும் பொழுது நீர் அதிகம் இருந்தால் சிறிது நீரை வடிகட்டி விட்டு சேர்க்க வேண்டும்.
காரம் அதிகம் வேண்டும் என்றால் மிளகாய் தூளின் அளவை கூட்டிக்கொள்ளலாம்.
வேக வைக்கும் பொழுதும், வெங்காயம் வதக்கும் பொழுதும் உப்பு சேர்த்துள்ளதால், இறுதியில் இறக்கும் பொழுது சுவை பார்த்த பிறகே உப்பு சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment